ADDED : மே 29, 2026 06:02 PM
கீழ் பகுதி.. டி.சி. படம்: தியாகதுருகம்: தியாகதுருகம் தி.மு.க., முன்னாள் நகர செயலாளர் பொன் ராமகிருஷ்ணனின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
தியாகதுருகம் மறைந்த தி.மு.க., முன்னாள் நகர செயலாளர் பொன் ராமகிருஷ்ணனின், 5ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. மவுண்ட் பார்க் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். முன்னாள் தி.மு.க., ஒன்றிய செயலாளர் சதா மகாலிங்கம், பேரூராட்சி துணை சேர்மன் சங்கர், மவுண்ட் பார்க் பள்ளி முதல்வர் கலைச்செல்வி, நகரப் பொருளாளர் ராஜசேகர், முன்னாள் பேரூராட்சி சேர்மன் பரசுராமன், மூர்த்தி, அமுதா, செல்வம் முன்னிலை வகித்தனர். பொன் ராமகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். செந்தில் ராஜா, ரத்தினவேல், ரவி, சம்பத், சசிகுமார் உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
