ADDED : மார் 10, 2025 12:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்துார் புனித அன்னாள் மனநல காப்பகத்தின் ஆண்டு விழா நேற்று நடந்தது.
தாளாளர் ஜான்ரத்தினம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணியன் கலந்து கொண்டார். அவர் மன நலம் பாதித்த மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள், 96 பேருக்கு கலை நிகழ்ச்சிகளை நடத்தி பரிசுகள் வழங்கினார்.
மேலும் காப்பகத்தின் சிறப்பாசிரியர்களுக்கு பாராட்டு சான்று வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில், ஆசிரியர், பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.