/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் வாணாபுரத்தில் அமைச்சர் துவக்கி வைப்பு
/
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் வாணாபுரத்தில் அமைச்சர் துவக்கி வைப்பு
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் வாணாபுரத்தில் அமைச்சர் துவக்கி வைப்பு
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் வாணாபுரத்தில் அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 12, 2024 06:42 AM

ரிஷிவந்தியம்: வாணாபுரத்தில் ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமினை அமைச்சர் வேலு துவக்கி வைத்தார்.
வாணாபுரத்தில் நடந்த முகாமிற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிகண்ணன், எம்.பி., மலையரசன் முன்னிலை வகித்தனர்.
டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் வேலு பங்கேற்று, ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாமினை துவங்கி வைத்து பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் மக்களின் மனம் அறிந்து பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார்.
இதில் ஒருதிட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டத்தில் இதுவரை மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சியில் நடந்த 2,508 முகாம்கள் மூலம் 8 லட்சத்து 4 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. விரைவில் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகள் துவங்கவுள்ளது.
முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது ஒரு மாத காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் வரும் செப்., 12ம் தேதி வரை 70 முகாம்கள் நடக்கவுள்ளது என அமைச்சர் வேலு பேசினார்.
பின் வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய சேர்மன்கள் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், சத்தியமூர்த்தி, தாமோதரன், துணை சேர்மன்கள் சென்னம்மாள் அண்ணாதுரை, நெடுஞ்செழியன், தாசில்தார் குமரன், பி.டி.ஓ.,க்கள் சந்திரசேகரன், நடராஜன், ஊராட்சி தலைவர் தீபாஅய்யனார், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பாரதிதாசன், துரைமுருகன், அசோக்குமார், நகர செயலாளர் ஜெய்கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.