/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இலவச வீட்டு மனை பட்டா அமைச்சர் வழங்கல்
/
இலவச வீட்டு மனை பட்டா அமைச்சர் வழங்கல்
ADDED : செப் 08, 2024 06:48 AM

திருக்கோவிலுார்: முகையூர் அடுத்த பரனுார் ஊராட்சியில், 65 பேருக்கு கலைஞர் கனவு இல்லம் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். அன்னியூர் சிவா எம்.எல்.ஏ, முன்னிலை வகித்தார்.
அமைச்சர் பொன்முடி, 65 பேருக்கு 19.30 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். தொடர்ந்து 11 பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினார்.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், முகையூர் ஒன்றிய சேர்மன் தனலட்சுமி உமேஷ்வரன், மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன், பி.டி.ஓ., ஜெகநாதன், தாசில்தார் கிருஷ்ணதாஸ், ஊராட்சித் தலைவர் பழனியம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.