/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுபான்மையினர் தனி நபர் கடன் விண்ணப்பங்கள் வரவேற்பு
/
சிறுபான்மையினர் தனி நபர் கடன் விண்ணப்பங்கள் வரவேற்பு
சிறுபான்மையினர் தனி நபர் கடன் விண்ணப்பங்கள் வரவேற்பு
சிறுபான்மையினர் தனி நபர் கடன் விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜூன் 14, 2024 07:03 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுபான்மையினர் சிறு தொழில் கடன், கைவினை கலைஞர் கடன், கல்விக் கடன் திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிறித்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக் கடன் திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் அதிக பட்ச கடனாக 20 லட்சம் ரூபாய் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்தில், கடன் பெறலாம். கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டத்தின் கீழ் அதிக பட்சம் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டத்தின் கீழ் நபர் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது.
மேலும் சிறுபான்மை மாணவ மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுகக்கு கல்வி கடன் திட்டத்தின் கீழ் 20 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.
எனவே, மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், கள்ளக்குறிச்சி அல்லது கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் அலுவலகத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை இதர ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்பிக்க வேண்டும்.