/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஊராட்சிகளில் எம்.எல்.ஏ., ஆய்வு
/
ஊராட்சிகளில் எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : ஆக 10, 2024 06:52 AM

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் எம்.எல்.ஏ., ஆய்வு மேற்கொண்டார்.
வாணாபுரம் அடுத்த இளையனார்குப்பம் கிராமத்தில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., நேற்று காலை ஆய்வு செய்தார். அப்போது, துார்ந்த கழிவுநீர் கால்வாயை உடனடியாக சரி செய்ய ஊராட்சி தலைவரிடம் அறிவுறுத்தினார்.
மேலும், சேறும், சகதியுமாக உள்ள பள்ளிக்கு செல்லும் தார்சாலையை புதுப்பிக்க வேண்டும். கட்டி முடிக்கப்படாமல் உள்ள ஊராட்சி அலுவலகம் மற்றும் சேவை மைய கட்டட பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கிராம மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் அதிகாரிகளோ அல்லது கட்சி நிர்வாகிகளோ பணம் கேட்டால் தன்னிடம் புகார் தெரிவிக்கலாம் என கூறினார்.
பின், புஷ்பகிரியில் பள்ளிக்கூடம் அருகே கல்வெர்ட் மற்றும் தெருக்களில் சிமென்ட் சாலை அமைக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். சின்னக்கொள்ளியூரில் நடந்து வரும் கழிவுநீர் கால்வாய் பணியை பார்வையிட்டார்.
வாணாபுரம் தாசில்தார் பாலகுரு, தி.மு.க., ஒன்றிய செயலாளர் துரைமுருகன், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமி சுப்ரமணியன், துணை சேர்மன் சென்னம்மாள் அண்ணாதுரை, பி.டி.ஓ.,க்கள் சந்திரசேகரன், நடராஜன், ஒன்றிய பொறியாளர் வேல்முருகன், மாவட்ட கவுன்சிலர் அமிர்தம் ராஜேந்திரன் உடனிருந்தனர்.

