/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மொபைல்போன், பணம் திருட்டு; மர்ம நபருக்கு போலீசார் வலை
/
மொபைல்போன், பணம் திருட்டு; மர்ம நபருக்கு போலீசார் வலை
மொபைல்போன், பணம் திருட்டு; மர்ம நபருக்கு போலீசார் வலை
மொபைல்போன், பணம் திருட்டு; மர்ம நபருக்கு போலீசார் வலை
ADDED : செப் 05, 2024 06:51 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கோட்டைமேட்டில் துாங்கி கொண்டிருந்த நபரிடமிருந்து மொபைல்போன் மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் மணிமாறன்,28; இவர் அதே பகுதியில் பெயர் பலகை (சைன் போர்டு) தயார் செய்யும் கடை வைத்துள்ளார்.
கடந்த 1ம் தேதி நள்ளிரவு 1 மணி வரை வேலை பார்த்த மணிமாறன், அப்பகுதியில் ரூ.19 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் போன் மற்றும் பர்சில் ரூ.18 ஆயிரம் பணத்தை வைத்து துாங்கியுள்ளார். தொடர்ந்து, அதிகாலை 3.30 மணியளவில் மணிமாறன் எழுந்து பார்த்த போது மொபைல்போன், பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து தேடினார்.
இதுபற்றி விசாரித்ததில், மர்மநபர் ஒருவர் பணம் மற்றும் மொபைல்போனை திருடி சென்றது தெரிந்தது.
இதையடுத்து மணிமாறன் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மர்மநபரை தேடி வருகின்றனர்.