ADDED : ஜூலை 09, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் துாங்கியவரிடம் மொபைல் போன் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பிரித்தா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை 4:00 மணிக்கு ஏமப்பேர் புதிய பஸ் நிலையம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பஸ் நிலையத்தில் துாங்கிக் கொண்டிருந்த ஒருவரிடம் ஒருவர் மொபைல் போன் திருட்டில் ஈடுபட்டார்.
அதனைப் பார்த்த போலீசார், அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், சேலம் மாவட்டம், ஆத்துார், முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த அல்லிமுத்து மகன் வினோத்குமார், 36; என்பது தெரிந்தது. அதனைத் தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
