/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மோடிக்கு பாடம் புகட்ட வேண்டும்: சங்கராபுரத்தில் உதயநிதி பேச்சு
/
மோடிக்கு பாடம் புகட்ட வேண்டும்: சங்கராபுரத்தில் உதயநிதி பேச்சு
மோடிக்கு பாடம் புகட்ட வேண்டும்: சங்கராபுரத்தில் உதயநிதி பேச்சு
மோடிக்கு பாடம் புகட்ட வேண்டும்: சங்கராபுரத்தில் உதயநிதி பேச்சு
ADDED : ஏப் 11, 2024 05:09 AM

சங்கராபுரம்: தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் மோடிக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என, அமைச்சர் உதயநிதி பேசினார்.
அவர், கள்ளக்குறிச்சி தி.மு.க., வேட்பாளர் மலையரசனை ஆதரித்து, சங்கராபுரத்தில் பேசியதாவது;
இதுவரை தமிழகத்தில் 30 தொகுதிகளில் பிரசாரம் செய்து, இன்று 31வது தொகுதியாக கள்ளக்குறிச்சி வந்துள்ளேன். நான் சென்ற 30 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.
தமிழகத்திற்கு மோடி எத்தனை முறை வந்தாலும் ஜெயிக்க முடியாது. தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் மோடிக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
கடந்த 2021 சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உதயசூரியன் எம்.எல்.ஏ., இந்த தொகுதிக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். 140 கோடியில் கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலை 4 வழி சாலையாக மாற்றப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
5 கோடியில் சங்கராபுரம் ஐ.டி.ஐ., நவீன படுத்தப்பட்டுள்ளது. 35 கோடியில் 12 உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால் சங்கராபுரத்தில் அரசு மகளிர் கலை கல்லுரி அமைக்கப்படும். கல்வராயன்மலைவாழ் மக்களுக்கு உடனுக்குடன் பட்டா வழங்கப்படும். பழமைவாய்ந்த கோவில்கள் சீரமைக்கப்படும்.
தமிழகத்தில் 1 கோடியே 20 லட்சம் பேருக்கு மாதம் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி வேட்பாளர் மலையரசன் 4 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்' என்றார்.
முன்னதாக அமைச்சர் வேலு, எம்.எல்.ஏ.,கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், முன்னாள் எம்.எல்.ஏ., அங்கையற்கண்ணி, ஒன்றிய சேர்மன் திலகவதி நாகராஜன், நகர செயலாளர் துரை ஆகியோர் முன்னிலையில் நகர எல்லையில் உதயநிதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

