/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வள்ளலார் பள்ளியில் தாய்மொழி நாள் விழா
/
வள்ளலார் பள்ளியில் தாய்மொழி நாள் விழா
ADDED : பிப் 22, 2025 07:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்; சங்கராபுரம் வள்ளலார் பள்ளியில் உலக தாய்மொழி நாள் விழா நடந்தது.
வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார்.
செயலாளர் ராதாகிருஷ்ணன், இளைஞர் அணி நிர்வாகி சந்திரசேகர், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார்.
திருக்குறள் பேரவை செயலாளர் லட்சுமிபதி, இன்னர்வீல் கிளப் முன்னாள் தலைவி தீபா சுகுமார் திரைப்பட பாடல் ஆசிரியர் முருககுமார் ஆகியோர் தாய் மொழி நாளின் சிறப்பு குறித்து பேசினர். இவர்கள் பேசியதில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை குமாரி நன்றி கூறினார்.