/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பென்காக் சிலாட் போட்டி வெற்றி வீரர்களுக்கு மவுண்ட் பார்க் பள்ளி தாளாளர் பாராட்டு

ADDED : ஆக 15, 2024 05:55 AM

தியாகதுருகம்: பென்காக் சிலாட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களை, தியாகதுருகம் மவுண்ட் பார்க் பள்ளி தாளாளர் மணிமாறன் பாராட்டினார்.
லடாக்கில் உள்ள என்.டி.எஸ். உள்விளையாட்டு அரங்கில் 2024-ம் ஆண்டிற்கான பென் காக் சிலாட் கூட்டமைப்பு (தற்காப்பு கலை) கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இதில் தமிழகத்தில் இருந்து இந்திய பென்காக் சிலாட் கூட்ட மைப்பின் துணை செயலாளர் மகேஷ்பாபு தலைமையில் 32 வீரர்கள், 13 வீராங்கனைகள் என மொத்தம் 45 பேர் கலந்து கொண்டு விளையாடினர்.
அதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் உளுந்தூர்பேட்டை அடுத்த குஞ்சரம் கிராமத்தை சேர்ந்த தனுஷ்,24; என்பவர் 50 முதல் 55 கிலோ எடை பிரிவிலும், எறையூர் கிராமத்தை சேர்ந்த வீராங்கனை சூஷன் பெல்சியா,20; என்பவர் 45 கிலோ எடை பிரிவிலும் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கத்தை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர்.
இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களை தியாகதுருகம் மவுண்ட் பார்க் பள்ளி தாளாளர் மணிமாறன் நேரில் வரவழைத்து பாராட்டி நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார். வீரர்கள் ரஹீம், சிவராமன், புவனேஷ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.