/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாரதா ஆசிரமத்தில் முளைப்பாரி விழா
/
சாரதா ஆசிரமத்தில் முளைப்பாரி விழா
ADDED : ஆக 12, 2024 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை சாரதா ஆசிரமத்தில் முளைப்பாரி விழா நடந்தது.
விழாவையொட்டி, பள்ளியந்தாங்கல், நகர், பில்லுார், பாலி, சாத்தனுார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து சாரதா ஆசிரம வளாகத்தில் வைத்தனர். பின் ஆசிரம வளாகத்தில் மாரியம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்த சாரதா அம்பாள் முன் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
ஸ்ரீ சாரதா ஆசிரம மேலாளர் அனந்த பிரேம ப்ரியா அம்பா தீபாராதனை செய்து வழிபட்டார். ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளி தாளாளர் ஆத்ம விகாச ப்ரியா அம்பா, ஆசிரம சகோதரிகள் ஏராளமானோர் வழிபட்டனர்.