/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'என் ஓட்டு விற்பனைக்கு அல்ல' : மவுன மொழியில் விழிப்புணர்வு
/
'என் ஓட்டு விற்பனைக்கு அல்ல' : மவுன மொழியில் விழிப்புணர்வு
'என் ஓட்டு விற்பனைக்கு அல்ல' : மவுன மொழியில் விழிப்புணர்வு
'என் ஓட்டு விற்பனைக்கு அல்ல' : மவுன மொழியில் விழிப்புணர்வு
ADDED : ஏப் 02, 2024 10:56 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி ஆர்.கே.எஸ். கலை அறிவியல் கல்லுாரியில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் இளம் வாக்காளர்கள் முதல் முறையாக ஓட்டளிப்பது தொடர்பாகவும், கல்லுாரி மாணவர்கள் தவறாமல் ஓட்டளித்திடவும், பணம், பரிசுப் பொருட்கள் வாங்காமல் ஓட்டளித்திடவும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன்படி கல்லுாரி மாணவ மாணவியர்கள் 'என் ஓட்டு விற்பனைக்கு அல்ல', 'தேர்தல் நாளான ஏப்ரல்-19-ஆம் தேதி தவறாமல் ஓட்டளித்திட வேண்டும்' என்பதை வலியுறுத்தி, மவுன மொழி நாடகம் நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தீபிகா, ஆர்.கே.எஸ். கல்லுாரி முதல்வர் மோகனரங்கன், கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.