/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நபார்டு திட்டத்தில் ரூ.13,965 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்; கலெக்டர் பிரசாந்த் தகவல்
/
நபார்டு திட்டத்தில் ரூ.13,965 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்; கலெக்டர் பிரசாந்த் தகவல்
நபார்டு திட்டத்தில் ரூ.13,965 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்; கலெக்டர் பிரசாந்த் தகவல்
நபார்டு திட்டத்தில் ரூ.13,965 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்; கலெக்டர் பிரசாந்த் தகவல்
ADDED : பிப் 22, 2025 07:19 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், வங்கியாளர்கள் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, அரசின் திட்ட பணிகள் குறித்து, கலந்துரையாடினார்.
தொடர்ந்து, நபார்டு திட்டத்தின் கீழ், 2025-26 ம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசியதாவது:
மாவட்டத்தில், 2025-26ம் நிதியாண்டில் 13 ஆயிரத்து 965 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன் திறனை தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி கணித்து வெளியிட்டுள்ளது.
இதில், வேளாண் துறைக்கு 11,328.33 கோடி ரூபாய், தொழில் துறைக்கு 924.48 கோடி ரூபாய், மேலும் முக்கிய துறைகளுக்கு 1,712.91 கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கப்பட்ட இந்த கடன் திட்ட அறிக்கை, விவசாயத்தின் வளர்ச்சி, மத்திய அளவில் தொழில் முனைவோர் முன்னேற்றம், மாவட்டத்தின் மொத்த பொருளாதார வளர்ச்சி மற்றும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
மாவட்டத்தில் விவசாய இயந்திர மயமாக்கல், சிறு துளி பாசன அமைப்பு மற்றும் கால்நடை வளர்ச்சிக்கு பெருமளவு வாய்ப்புகள் உள்ளன. அதன் அடிப்படையிலும் வங்கிகள், புள்ளி விபரங்கள், பல் துறை அலுவலர்களின் ஆலோசனை, தேசிய அளவிலான திட்டங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
அரசு உதவி திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு கடன் தொகை விரைவாக அங்கீகரிக்க வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, வேளாண் துறையில் நடுத்தர மற்றும் நீண்டகால கடன்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், இத்திட்ட ஆவணத்தை பயன்படுத்தி தங்களது இலக்குகளை முழுமையாக நிறைவு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் பேசினார்.
கூட்டத்தில் முன்னோடி மாவட்ட அலுவலர் வம்சி ரெட்டி, முன்னோடி வங்கி மேலாளர் ரஞ்சித், தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன், மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் மற்றும் வங்கியாளர்கள், அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.