/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போலீஸ் அலட்சியமே கள்ளச்சாராய மரணத்திற்கு காரணம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு குற்றச்சாட்டு

ADDED : ஜூன் 27, 2024 03:22 AM

கள்ளக்குறிச்சி: போலீஸ் அலட்சியத்தால் கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் வீடுகளுக்கு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு நேற்று நேரில் சென்று, விசாரித்தார்.
முன்னதாக, கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையம் சென்று, ''கள்ளச்சாராய விற்பனையை தடுக்காமல் அலட்சியமாக இருந்ததால்தான் இந்த மரண சம்பவங்கள் நடந்துள்ளது. சாராய விற்பனை உங்களுக்கு தெரியாமல் போனது ஏன்'' என, கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து, கள்ளச்சாராயம் எப்படி உங்களுக்கு கிடைத்தது உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்து, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் விசாரித்தார்.
அப்போது நிருபர்களிடம் குஷ்பு கூறியதாவது:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனையை தமிழக அரசு தடுக்க தவறி விட்டது. சம்பவம் நடந்த இடத்தில்தான், நீதித்துறை, காவல்துறை அலுவலகங்கள், நீதிபதிகள் குடியிருப்புகள் உள்ளன. கள்ளச்சாராய விற்பனை எப்படி இவர்களின் கண்களில் படவில்லை.
இங்குள்ள போலீசார் உள்ளிட்ட அதிகாரிகளின் அலட்சியத்தால் கள்ளச்சாராய மரணங்கள் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் பொறுப்பற்ற நிலைதான் இந்த சம்பவத்திற்கு காரணம்.
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் கொடுதது விட்டால் போதுமா, இறந்தவர்களின் குடும்ப பெண்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே, இதுகுறித்து முழுமையான அறிக்கையை டில்லியில் உள்ள மகளிர் ஆணையத்திடம் அளித்து, நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.