ADDED : பிப் 28, 2025 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி, ; கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வேதியியல் துறை சார்பில், தேசிய அறிவியல் தின விழா நடந்தது.
துறை தலைவர் தர்மராஜா வரவேற்றார். முதல்வர் முனியன் உரையாற்றினார். பேராசிரியர்கள் ராஜா, கனகராசு வாழ்த்தி பேசினர்.
மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு, ஓவி யம், வினாடி - வினா உள்ளிட்ட போட்டிகள் நடத் தப்பட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
நடுவர்களாக தமிழ்த்துறை தலைவர் மோட்ச ஆனந்தன், நுாலகர் அசோக் குமார் செயல்பட்டனர்.
மாணவர் மனோகர் நன்றி கூறினார்.