ADDED : மார் 02, 2025 04:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் தேசிய அறிவியல் தினவிழா நடந்தது.
விழாவிற்கு, கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கி, சர்.சி.வி.ராமன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பேராசிரியர் சந்திரசேகர் வரவேற்றார்.
கல்லுாரி செயலாளர் ஏழுமலை, பொருளாளர் சுப்ரமணியன், தாளாளர் பழனிராஜ், துணைத் தலைவர் முஸ்டாக் அகமது, கல்லுாரி முதல்வர் நாராயணசாமி, துணை முதல்வர் மீனாட்சி, நிர்வாக அலுவலர் குமார் பேசினர். மாவட்ட வானியல் மன்ற தலைவர் ஜானகிராமன் சிறப்புரையாற்றினார்.
பல்வேறு துறை மாணவர்களின் அறிவியல் படைப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. நிறைவாக கருத்தரங்கம் மற்றும் வினாடி வினா நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பேராசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார்.

