/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேசிய இளைஞர் தின விழா விழிப்புணர்வு ஊர்வலம்
/
தேசிய இளைஞர் தின விழா விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஆக 31, 2024 03:36 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சார்பில் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தேசிய இளைஞர் தின விழாவையொட்டி, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஊர்வலத்திற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து எச்.ஐ.வி., தொற்று பரிசோதனை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். ஊர்வலத்தில், எச்.ஐ.வி., தொற்று தடுப்பு குறித்தும், சிகிச்சைகள், தற்காப்பு வழிமுறைகள், நம்பிக்கை மையம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்றனர்.
மேலும் மாணவர்களின் விழிப்புணர்வு நடனம், மற்றும் கலைக் குழுவினர் மூலம் கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய நிகழ்ச்சிகள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
எஸ்.பி., ரஜத்சதுர்வேதி, அரசு மருத்துவக் கல்லுாரி துணை நிலைய மருத்துவ அலுவலர் பழமலை, மாவட்ட திட்ட மேலாளர் (எய்ட்ஸ் கட்டுபாட்டு அலகு) கவிதா மற்றும் சுகாதார துறை அலுவலர்கள், கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.