/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் தின விழா
/
அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் தின விழா
ADDED : மே 13, 2024 06:15 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மகப்பேறு பிரிவு வளாகத்தில் உலக செவிலியர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன் உஷா, நிலைய மருத்துவர் பொற்செல்வி தலைமையில் செவிலியர் தினத்தை முன்னிட்டு எனது வாழ்க்கையை துாய்மையாகவும், தொழிலை அர்ப்பணிப்போடும் நடத்திச் செல்வேன்.
செவிலியர் தொழிலுக்கு எந்த ஒரு கலங்கம் விளைவிக்கும் செயலில் இருந்து விலகி இருப்பேன். நோயாளிகளுக்கு எந்த ஊரு கெடுதலுக்கு உண்டான மருந்தை தரவோ, எடுக்கவோ மாட்டேன்.
எனது சக்திக்குட்பட்டு பணியை திறம்பட செய்வேன் என செவிலியர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றனர்.