/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க ஆர்ப்பாட்டம்
/
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 15, 2025 06:21 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் அப்பு தலைமை தாங்கினார்.
முத்துக்குமாரசாமி, கலியன், அந்தோணிசாமி முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் பொன்னுசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் 6,750 ரூபாய் அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். மருத்துவபடி வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைத்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சங்க நிர்வாகிகள் மாரியம்மாள், உண்ணாமலை, சஞ்சீவி உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.