/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேர்தல் செலவினங்களை கண்காணிக்க அலுவலர்களுக்கு பார்வையாளர் அறிவுறுத்தல்
/
தேர்தல் செலவினங்களை கண்காணிக்க அலுவலர்களுக்கு பார்வையாளர் அறிவுறுத்தல்
தேர்தல் செலவினங்களை கண்காணிக்க அலுவலர்களுக்கு பார்வையாளர் அறிவுறுத்தல்
தேர்தல் செலவினங்களை கண்காணிக்க அலுவலர்களுக்கு பார்வையாளர் அறிவுறுத்தல்
ADDED : மார் 21, 2024 11:28 AM

கள்ளக்குறிச்சி: தேர்தல் செலவினங்களை முறையாக கண்காணித்திட தேர்தல் பணி மேற்கொள்ளும் அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.
லோக்சபா தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சி தொகுதியில் தேர்தல் செலவினங்களை முறையாக கண்காணித்திடும் பொருட்டு தேர்தல் பணி மேற்கொள்ளும் அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தேர்தல் செலவின மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வருவாய் பணி அதிகாரி மனோஜ்குமார் சர்மா தலைமை தாங்கினார். கலெக்டர் ஷ்ரவன்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கள்ளக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளுக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி செலவின மேற்பார்வையாளர்கள், கணக்கு குழுவினர், பறக்கும் படை குழுவினர், நிலை கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர் தேர்தலில் செலவின கண்காணிப்பு எவ்வாறு மேற்கொள்வது, பறிமுதல் செய்யப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கைப்பற்ற நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அறிவுரை வழங்கினார்.
தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகளில் 54 பறக்கும் படை குழு மற்றும் 54 நிலை கண்காணிப்பு குழுவினர்கள் மூலம் கடந்த 20 ம் தேதி வரை கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம் ரூ.6 லட்சத்து 82 ஆயிரத்து 300 குறித்து ஆய்வு செய்தார்.
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மிக கவனமுடன் முறையாக மேற்கொள்ள வேண்டும். அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் தேர்தலில் மேற்கொள்ளும் செலவினங்களை முறையாக கண்காணித்திட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதையும், தேர்தல் தொடர்பான புகார்கள் வருவதை பதிவு செய்வது குறித்து தேர்தல் கட்டுபாட்டு அறையினை ஆய்வு செய்து உரிய ஆலோசனைகள் வழங்கினார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முருகேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) சங்கர், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ரமேஷ், மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

