ADDED : ஜூன் 30, 2024 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம், : ரிஷிவந்தியத்தில் நிலைதடுமாறி பைக்கில் இருந்து விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விழுப்புரம் மாவட்டம், ஆடூர் கொளப்பாக்கத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம் மனைவி சடையம்மாள், 65; இவர் கடந்த 23ம் தேதி தனது பேரன் பாலுவுடன், பைக்கில் தியாகதுருகம் சென்றார். ரிஷிவந்தியம் அருகே சென்ற போது, சடையம்மாள் நிலைதடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவர் தியாகதுருகம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.
தொடர்ந்து, மூதாட்டி சடையம்மாளுக்கு தலைவலி ஏற்பட்டதால் வேலுார் அடுத்த அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சடையம்மாள் இறந்தார்.
புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.