/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாகனம் மோதியதில் முதியவர் பலி
/
வாகனம் மோதியதில் முதியவர் பலி
ADDED : ஆக 17, 2024 03:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் இறந்தார்.
சின்னசேலம் அடுத்த பூண்டி காளசமுத்திரம் ரோடு சேர்ந்தவர் மூக்கன், 70; கடந்த 9 ம் தேதி இரவு 9.30 மணியளவில் சின்னசேலம் வந்து மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ரைஸ் மில் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மூக்கன் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த மூக்கனை மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.