/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பழைய பாலப்பட்டு தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் இன்றி மாணவர்கள் அவதி
/
பழைய பாலப்பட்டு தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் இன்றி மாணவர்கள் அவதி
பழைய பாலப்பட்டு தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் இன்றி மாணவர்கள் அவதி
பழைய பாலப்பட்டு தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் இன்றி மாணவர்கள் அவதி
ADDED : மே 28, 2024 11:16 PM
சங்கராபுரம் : பழைய பாலப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச் சுவர் இல்லாததால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கல்வராயன்மலை ஒன்றியம், பழைய பாலப்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 55க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். 2 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
இப்பள்ளி வளாகத்தில் இருந்த பழுதடைந்த பள்ளிக் கட்டடம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஜே.சி.பி., மூலம் முன்பு இடிக்கப்பட்டது.
அப்போது ஜே.சி.பி., இயந்திரத்தை பள்ளிக்கு உள்ளே கொண்டுவர சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. அதன் பிறகு சுற்றுச்சுவரை கட்ட முயற்சி மேற்கொள்ளவில்லை.
இதனால், இரவு நேரங்களில் குடி மகன்கள் பள்ளி வளாகத்தை பாராக மாற்றி மது அருந்துகின்றனர். மேலும், பள்ளி நேரங்களில் கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. இதனால், ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டித்தரக் கோரி கல்வித்துறை அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, பழைய பாலப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச் சுவர் கட்ட மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.