/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தடுப்புச் சுவர் மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: 9 பேர் படுகாயம்
/
தடுப்புச் சுவர் மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: 9 பேர் படுகாயம்
தடுப்புச் சுவர் மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: 9 பேர் படுகாயம்
தடுப்புச் சுவர் மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: 9 பேர் படுகாயம்
ADDED : ஏப் 28, 2024 05:39 AM

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே சாலை தடுப்புச் சுவர் மீது தனியார் ஆம்னி பஸ் மோதி கவிழ்ந்த விபத்தில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்
நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி தனியார் ஆம்னி பஸ் 27 பயணிகளுடன் நேற்று சென்றது. 4:30 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த ஆசனுார் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் மேம்பால தடுப்புச்சுவர் மீது மோதி கவிழ்ந்தது.
இதில் பஸ் டிரைவர் துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அடுத்த அம்மாபுரம் ஹரிகரன், 56; கிளீனர் தஞ்சாவூர் சபரிநாதன், 26; பயணிகள் திருநெல்வேலி அடுத்த நாங்குநேரி பாரதி, 26; கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பிரதீப் ராஜ் மனைவி பெனிஷா, 25; உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர். உடன் அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எடைக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.