/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
செயற்கை உரம் பயன்பாடு குறைப்பு விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி
/
செயற்கை உரம் பயன்பாடு குறைப்பு விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி
செயற்கை உரம் பயன்பாடு குறைப்பு விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி
செயற்கை உரம் பயன்பாடு குறைப்பு விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி
ADDED : ஆக 01, 2024 07:37 AM
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த நெடுமானுர் கிராமத்தில் செயற்கை உரங்களின் உபயோகத்தை குறைப்பது குறித்து விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி நடந்தது.
ஆத்மா திட்டத்தின் சார்பில் ஒருங்கிணைந்த உர வேளாண்மை முலம் செயற்கை உரங்களின் பயன்பாட்டை குறைப்பது குறித்து நடந்த பயிற்சிக்கு நெடுமானுர் ஊராட்சி தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார்.
வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) அன்பழகன் முன்னிலை வகித்து, முதலமைச்சரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டம் குறித்து விளக்கினார்.
ஆத்மா தொழில்நுட்ப மேலாளர் மவிசுதா ஆத்மா திட்ட பயிற்சி பற்றியும், ஒருங்கிணைந்த உர வேளாண்மை, வரப்பு பயிர், ஊடு பயிர்களின் அவசியம் குறித்து விளக்கினார்.
தோட்டக்கலை உதவி அலுவலர் கலைச்செல்வி தோட்டக்கலைத் துறை திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார். உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருண்குமார், லோகபிரியா மற்றும் 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.