ADDED : செப் 01, 2024 11:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் அருகே பைக் விபத்தில் ஒருவர் இறந்தார்.
கச்சிராயபாளையம் அடுத்த அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் உதயகுமார், 38.
இவர், நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் தனது நண்பரான எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சீனுவாசன், 36; என்பவருடன் பைக்கில் சென்றார்.
அக்கராயபாளையம் அருகே சென்றபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியன் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த உதயகுமார் கோயம்புத்துார் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
புகாரின்பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.