/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக் மீது லாரி மோதி ஒருவர் பலி
/
பைக் மீது லாரி மோதி ஒருவர் பலி
ADDED : பிப் 28, 2025 05:22 AM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு இளையாங்கண்ணி கூட்ரோடு அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார்.
திருக்கோவிலுார் அடுத்த கழுமரம் ஊராட்சிக்குட்பட்ட கோட்டகம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்முருகன், 45; விவசாயம் மற்றும் பால் வியாபாரம் செய்து வருகிறார். திருமணமானவர்.
இவர் நேற்று திருவண்ணாமலை மாவட்டம் பெருங்களத்துார் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி பைக்கில் சென்று மீண்டும் வீடு திரும்பினார்.
இளையாங்கன்னி கூட்ரோடு அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, முன்னே சென்ற மூன்று சக்கர சைக்கிள் மீது மோதி கீழே விழுந்தார்.
அப்போது பின்னால் வந்த லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே செந்தில் முருகன் இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி ஜீவா கொடுத்த புகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

