ADDED : மார் 06, 2025 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை,: உளுந்துார்பேட்டை தாலுகா உ.செல்லூரை சேர்ந்தவர் காசி, 55; கூலி தொழிலாளி. நேற்று பகல் 12.30 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்க சென்றவர், தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
உளுந்துார்பேட்டை தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு உளுந்துார் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.