/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மக்காசோளத்துடன் ஊடுபயிராக சின்ன வெங்காயம் சாகுபடி
/
மக்காசோளத்துடன் ஊடுபயிராக சின்ன வெங்காயம் சாகுபடி
ADDED : ஆக 19, 2024 12:18 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் மக்காசோளத்தில் ஊடுபயிராக சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் முக்கிய பிராதன தொழிலாக உள்ளது. விவசாயிகள் இரட்டிப்பு லாபம் பெறும் பொருட்டு நீண்ட கால பயிரில் குறுகிய பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்வதற்கு விவசாயிகளிடையே வழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கான சாகுபடி முறைகள் குறித்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குகின்றனர்.
பருவ மழைக் காலங்களில் நீர் நிலைகளில் தண்ணீர் அதிகளவில் இருக்கும் போது நெல், கரும்பு, மஞ்சள், மக்காசோளம் போன்ற பயிர்களை சாகுபடி செய்கின்றனர்.
தண்ணீர் பற்றாக்குறையின் போது குறுகிய கால பயிரான உளுந்து, எள், வேர்க்கடலை போன்ற பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தட்வெட்ப நிலைக்கேற்ப சின்ன வெங்காயமும் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கிடையே 6 மாத பயிரான மக்காச் சோளத்துடன் 3 மாதத்தில் அறுவடை செய்யக்கூடிய சின்ன வெங்காயத்தை ஊடுபயிராக பயிரிட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த அகரகோட்டாலம் உட்பட பல்வேறு இடங்களில் சின்ன வெங்காயம் ஊடுபயிராக பயிரிடப்பட்டுள்ளது.