/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருநங்கைகளுக்கு கடனுதவி சிறப்பு முகாம் நடத்த உத்தரவு
/
திருநங்கைகளுக்கு கடனுதவி சிறப்பு முகாம் நடத்த உத்தரவு
திருநங்கைகளுக்கு கடனுதவி சிறப்பு முகாம் நடத்த உத்தரவு
திருநங்கைகளுக்கு கடனுதவி சிறப்பு முகாம் நடத்த உத்தரவு
ADDED : மார் 03, 2025 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருநங்கைகளை தொழில் முனைவோர்களாக மாற்ற, வங்கி கடனுதவி சிறப்பு முகாம் நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில், திருநங்கைகளுக்கான குறைகேட்புக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். திருநங்கைகளிடம் குறைகள், கோரிக்கைகள் கேட்டு, நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் திருநங்கைகளை தொழில் முனைவோராக மாற்ற, தாட்கோ மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில், சுய தொழில் செய்ய வங்கி கடனுதவி பெறுவதற்கான சிறப்பு முகாம் நடத்த, அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.