தர்பூசணிக்கு உரிய விலை கிடைக்காததால்... வேதனை:விவசாய நிலத்தில் அழுகி பாழாகும் அவலம்
தர்பூசணிக்கு உரிய விலை கிடைக்காததால்... வேதனை:விவசாய நிலத்தில் அழுகி பாழாகும் அவலம்
UPDATED : ஜூலை 15, 2026 04:02 AM
ADDED : ஜூலை 14, 2026 07:51 PM

உளுந்துார்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தர்பூசணி விளைச்சல் அதிகளவில் இருந்தாலும் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
கோடைக்காலத்தில் பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பழங்களில் தர்பூசணி முக்கியத்துவம் வாய்ந்தது. விட்டமின் ஏ மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ள தர்பூசணியை சாப்பிடுவதன் மூலம் வறட்சியிலிருந்து நமது உடல் பாதுகாக்கப்படும்.
ஒரு ஏக்கர் பரப்பளவில் தர்பூசணி பயிரிட 400 கிராம் விதைகள் தேவைப்படுகிறது. விதை நட்ட 65 நாட்களில் 80 நாட்களில் தர்பூசணி நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயாராகிறது. ஒரு ஏக்கர் பரப்பளவில் 10 முதல் 15 டன் தர்பூசணி பழங்களை அறுவடை செய்யலாம். மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள தர்பூசணி பழங்கள் நன்றாக வளர்ந்திருந்தாலும், உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.
விவசாயிகளிடமிருந்து தர்பூசணி பழங்களை மொத்தமாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ஒரு கிலோ தர்ப்பூசணியை ரூ. 2 முதல் ரூ. 6 வரை மட்டுமே விலை நிர்ணயம் செய்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நன்றாக சிவந்த நிறத்தில் இருக்கும் தர்பூசணி அதிகபட்சமாக கிலோ 8 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த விலை தர மறுக்கும் பட்சத்தில் தர்பூசணி பழங்கள் அறுவடை செய்ய முடியாமல் விளைநிலத்திலேயே அழுகி வீணாகிறது. இதனால் வேறு வழியின்றி மிகவும் குறைந்த விலைக்கு பழங்களை விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
தர்பூசணியில் ரசாயனம் கலக்கப்படுவதாக கடந்த சில ஆண்டிற்கு முன்பு வதந்தி பரவியது. அதன் காரணமாக தர்பூசணி விலை
குறிப்பாக, தர்பூசணி பழத்திற்காக முதலீடு செய்த தொகை கூட கிடைக்காததால் விவசாயிகளுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தர்பூசணி பயிர் செய்த விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
