
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விருக்ஷா கைவினை தொழில் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் ஓவிய பயிற்சி முகாம் துவங்கியது.
கள்ளக்குறிச்சி அண்ணாநகர் விருக்ஷா கைவினை தொழில் கூட்டமைப்பு கட்டடத்தில் மத்திய அரசின் சீட்டிவிசன் இந்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் நிதி உதவியுடன் திருக்கோவிலுார் டான் இன்ஸ்டியூட் ஆப் ரூரல் டெவலப்மென்ட் இணைந்து நடத்துகின்ற இரண்டு நாள் ஓவிய பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
கள்ளக்குறிச்சி நகரமன்ற தலைவர் சுப்புராயலு தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி துவக்கினார். திருக்கோவிலுார் டான் இன்ஸ்டியூட் பார் ரூரல் டெவலப்மென்ட் நிர்வாக இயக்குனர் சுந்தர் மற்றும் மாநில விருது பெற்ற சிற்பி சக்திவேல் இதற்கான பயிற்சியை அளிக்கின்றனர்.