/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பாசார் நடுநிலைப்பள்ளி நுாற்றாண்டு விழா
/
பாசார் நடுநிலைப்பள்ளி நுாற்றாண்டு விழா
ADDED : மார் 09, 2025 05:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த, பாசார் நடுநிலைப்பள்ளியில் நுாற்றாண்டு மற்றும் பள்ளி ஆண்டு விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் மோகன் சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் அனுஜா, கவுன்சிலர் செல்வி, மேலாண்மை குழு தலைவர் தங்கமலர் முன்னிலை வகித்தனர்.
தலைமை ஆசிரியர் ராஜா வரவேற்றார். ஆடல், பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நுாற்றாண்டு நினைவு கல்வெட்டு, திறக்கப்பட்டது.
முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட, 40 பேர் பள்ளி வளர்ச்சி பணிக்கு, தலா ரூ.5 ஆயிரத்தை நிதி உதவியாக வழங்கினர்.