/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பட்டா, சிட்டா, பட்டா மாறுதல், நிலஅளவை சேவைகளை இணைய தளம் மூலம் பெறலாம்
/
பட்டா, சிட்டா, பட்டா மாறுதல், நிலஅளவை சேவைகளை இணைய தளம் மூலம் பெறலாம்
பட்டா, சிட்டா, பட்டா மாறுதல், நிலஅளவை சேவைகளை இணைய தளம் மூலம் பெறலாம்
பட்டா, சிட்டா, பட்டா மாறுதல், நிலஅளவை சேவைகளை இணைய தளம் மூலம் பெறலாம்
ADDED : ஜூலை 13, 2024 06:24 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பட்டா, சிட்டா பார்வையிட, பதிவிறக்கம் செய்திடவும், பட்டா மாறுதல் மற்றும் நிலஅளவைத் தொடர்பான அனைத்து சேவைகளையும் இணையதளம் மூலமாகவே பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திகுறிப்பு :
தமிழ்நாடு நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட துறை www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தை தேசிய தகவலியல் மையம் மூலம் உருவாக்கியுள்ளது. இணையத்துடன் பட்டா மாறுதல் - 'தமிழ்நிலம்' மொபைல் செயலி இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணைய வழி சேவையான தமிழ்நாடு சிட்டிசன் போர்டல் https://tamilnilam.tn.gov.in/citizen/ போன்ற சேவைகளும் இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், உட்பிரிவு மற்றும் உட்பிரிவில்லாத பட்டா மாறுதல் கோரி வரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் செயல்படுத்த 'தமிழ்நிலம்' (ஊரகம்) மற்றும் தமிழ்நிலம் (நகரம்) மென்பொருள்கள் உருவாக்கப்பட்டன. இதனை தொடர்ந்து புலப்படங்களிலும் அனைத்து உட்பிரிவு மாற்றங்கள் கொண்டு வர ஏதுவாக 'கொலாப்லேண்ட்' மென்பொருள் உருவாக்கப்பட்டு இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், பட்டா, சிட்டா பார்வையிட மற்றும் சரிபார்க்க, அரசு புறம்போக்கு நில விவரம், புலப்படம், நகர நில அளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட, பதிவிறக்கம் மற்றும் பட்டா மாறுதல், விண்ணப்ப நிலை விவரங்களை அறிய எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையவழி சேவையான www.eservices.tn.gov.in என்ற சேவையும் www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரைபடங்கள் விற்பனை, தொடர்பு விளக்கப்பட்டியல்கள் விவரங்கள் போன்றவை பதிவிறக்கம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகளின் விவரங்கள், இத்துறையின் முக்கிய அரசாணைகள், சுற்றறிக்கைகள், பரப்பளவு மற்றும் அளவு மாற்றங்கள் போன்றவைகளையும் www.tnlandsurvey.tn.gov.inஎன்ற இணையத்தில் அறியலாம்.
எனவே கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுமக்கள் இந்த இணையதளம் மற்றும் 'தமிழ்நிலம்' செயலி மூலம் நிலஅளவை தொடர்பான விவரங்களைப் பார்வையிட்டு பயனடைய வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.