/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கொசுப் புழுக்கள் ஒழிப்பு கடைகளுக்கு அபராதம்
/
கொசுப் புழுக்கள் ஒழிப்பு கடைகளுக்கு அபராதம்
ADDED : மே 24, 2024 06:07 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சுகாதார துறை மற்றும் நகராட்சி சார்பில் காய்ச்சல் தடுப்பு கொசுப் புழுக்கள் ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
கள்ளக்குறிச்சி நகராட்சியில் கச்சிராயப்பாளையம் ரோடு, கோட்டைமேடு ஆகிய இடங்களில் டெங்கு சிக்கன்குனியா மலேரியா போன்ற காய்ச்சல் வராமல் தடுப்பு நடவடிக்கையாக பஞ்சர் கடைகள், பழைய இரும்புக் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வில் கொசுப்புழுக்கள் இருந்த 2 கடைகள் கண்டறியப்பட்டு தலா ரூ.1,100 வீதம் மொத்தம் ரூ.2,200 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து கடைகளில் கொசுப்புழுக்கள் வளரும் அபாயமுள்ள 150 டயர்கள் அகற்றப்பட்டன.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர்கள் கவியரசன், விக்னேஷ்வரன், வசந்தன், பாலா, நகராட்சி களப்பணியாளர் மகேஸ்வரி மற்றும் நகராட்சி கொசுப் புழு ஒழிப்பு பணியாளர்கள் உடனிருந்தனர்.