/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போக்குவரத்து விதிமுறை மீறல் அரசு பஸ்களுக்கு அபராதம்
/
போக்குவரத்து விதிமுறை மீறல் அரசு பஸ்களுக்கு அபராதம்
போக்குவரத்து விதிமுறை மீறல் அரசு பஸ்களுக்கு அபராதம்
போக்குவரத்து விதிமுறை மீறல் அரசு பஸ்களுக்கு அபராதம்
ADDED : மே 26, 2024 06:08 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 2 அரசு பஸ்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
கள்ளக்குறிச்சி போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் பஸ் நிலையம் பகுதியில் நேற்று முன்தினம் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பஸ் நிலையம் நுழைவு பகுதி வழியாக, வெளியே வந்த டிஎண் 30 என் 1860 என்ற பதிவெண் கொண்ட அரசு பஸ்சுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோல், சேலம் மார்க்கத்தில் இருந்து பஸ்நிலையத்திற்கு வந்த டிஎன் 21 என் 1476 என்ற பதிவெண் கொண்ட அரசு பஸ், நான்கு முனை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து போலீசாரின் சைகையை மீறி நிற்காமல் சென்றது.
இதனையடுத்து போக்குவரத்து விதிமுறை மீறி சென்ற அரசு பஸ்சுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.