/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பென்ஷனர்கள் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
பென்ஷனர்கள் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 15, 2025 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டையில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டார தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பட்டுரோஜா முன்னிலை வகித்தார்.
செயலாளர் டைட்டஸ் ராஜ் வரவேற்றார். துணைத் தலைவர் ஆறுமுகம் கோரிக்கை குறித்து பேசினார்.
மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் அண்ணாதுரை, பொருளாளர் சாரங்கபாணி, துணைச் செயலாளர் கோவிந்தன், மாவட்ட பிரதிநிதி சின்னையன் உட்பட பலர் பங்கேற்றனர்.