/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பிரம்மோற்சவ விழா கருட சேவையில் பெருமாள்
/
பிரம்மோற்சவ விழா கருட சேவையில் பெருமாள்
ADDED : ஏப் 21, 2024 06:12 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் பெருமாள் கருட சேவையில் அருள் பாலித்தார்.
கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 14ம் தேதி துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடக்கிறது. 5ம் நாள் விழாவான நேற்று முன்தினம் இரவு கருட சேவை உற்சவம் நடந்தது.
அதனையொட்டி மாலையில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், பகவத் சங்கல்பம், சாற்றுமுறை சேவை பூஜை நடந்தது. பெருமாள் ராஜகோபுரத்தைக் கடந்து வந்ததும், மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

