/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நாட்டுப்புற நலவாரியம் மூலம் உதவித்தொகை கேட்டு மனு
/
நாட்டுப்புற நலவாரியம் மூலம் உதவித்தொகை கேட்டு மனு
ADDED : ஆக 21, 2024 06:35 AM

கள்ளக்குறிச்சி : நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியம் மூலம் மாதாந்திர உதவித் தொகை வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
முண்டியூர் கிராம பெண்கள் அளித்த மனு:
கல்வராயன்மலை தாலுகாவிற்குட்பட்ட முண்டியூர் கிராமத்தில் 75க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 3 தலைமுறைகளாக கும்பி பாட்டு உள்ளிட்ட நாட்டுப்புற கலைக்குழுவில் இணைந்து செயல்பட்டு வருகிறோம். மேலும் கிராமத்தில் 15 பெண்கள் சேர்ந்து தில்லையம்மன் கும்பி பாட்டு கலைக்குழு நடத்தி வருகிறோம்.
எங்களை தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் இணைத்து மாதாந்திர நிதி உதவி வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

