/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளி அருகே டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யக்கோரி மனு
/
அரசு பள்ளி அருகே டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யக்கோரி மனு
அரசு பள்ளி அருகே டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யக்கோரி மனு
அரசு பள்ளி அருகே டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யக்கோரி மனு
ADDED : ஆக 30, 2024 12:11 AM

விழுப்புரம்: அரசு பள்ளிக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என வன்னியர் சங்க நிர்வாகிகள், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் குமாரசாமி தலைமையில் நிர்வாகிகள், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
திருவெண்ணெய்நல்லுார் அருகே பெரியசெவலை, சரவணபாக்கம் உட்பட பல்வேறு கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் பலர் விவசாய கூலி வேலை செய்வதால், பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்கின்றனர்.
இந்த சூழலில், பெரியசெவலையில் அரசு மேல்நிலை பள்ளிர அருகே டாஸ்மாக் கடை வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இவ்வழியாக செல்லும் போது, குடிமகன்களால் இடையூறு ஏற்படுகிறது. மேலும், அவ்வழியாக செல்லும் பெண்களிடம் தகாத முறையில் நடக்கின்றனர்.
பள்ளி அருகே டாஸ்மாக் கடை இருப்பதால் மாணவர்களும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் நிலை உள்ளது. எனவே, டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

