/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீட்டுமனை பட்டா வழங்ககோரி இருளர் மக்கள் மனு
/
வீட்டுமனை பட்டா வழங்ககோரி இருளர் மக்கள் மனு
ADDED : ஆக 16, 2024 06:31 AM

கள்ளக்குறிச்சி: திம்மலை கிராமத்தில் வசிக்கும் இருளர் சமுதாய மக்கள் வீட்டுமனை பட்டா வழங்ககோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அகில இந்திய பழங்குடி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் துரை செவ்வராஜ் தலைமையில், திம்மலை கிராமத்தில் வசிக்கும் 20க்கும் மேற்பட்ட இருளர் சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
திம்மலை கிராமத்தில் ஏரிக்கரை புறம்போக்கு நிலத்தில் இருளர் சமுதாயத்தை சேர்ந்த 24 குடும்பத்தினர் கடந்த 40 ஆண்டுகளாக வசிக்கின்றனர். இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு சொந்தமாக விளைநிலம், வீட்டுமனை கிடையாது.
வீட்டுமனை பட்டா கேட்டு பல முறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, உரிய விசாரணை செய்து திம்மலையில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.