/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆலய திருவிழாவையொட்டி கடைகளுக்கு வரி வசூலிக்க மனு
/
ஆலய திருவிழாவையொட்டி கடைகளுக்கு வரி வசூலிக்க மனு
ADDED : மே 24, 2024 06:00 AM

கள்ளக்குறிச்சி: மேல்நாரியப்பனுார் ஆலய திருவிழாவையொட்டி, கடைகளுக்கு ஊராட்சி மூலம் வரி வசூல் செய்ய நடவடிக்கை கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
மேல்நாரியப்பனுார் ஊராட்சி தலைவர் தனலட்சுமி கோவிந்தராஜ் தலைமையில் அப்பகுதி மக்கள் அளித்த மனு;
சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுார் கிராமத்தில் புனித அந்தோணியர் திருத்தலம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூன் 12, 13, 14 ஆகிய தேதிகளில் தேர் திருவிழா நடைபெறும். இத்திருவிழாவையொட்டி, ஆலயத்தை சுற்றியுள்ள சாலைகளில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்யப்படும். அனைத்து கடைகளுக்கும் ஊராட்சி மூலம் வரி வசூல் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது.
இந்நிலையில் இவ்வாண்டு ஊராட்சி மூலம் வரி வசூல் செய்வதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, தாங்கள் தான் வசூல் செய்வோம் என்று பிரச்னை செய்கின்றனர். எனவே, வழக்கம் போல் ஊராட்சி மூலம் வரி வசூல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் உள்ளது.