/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பாவளம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க மனு
/
பாவளம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க மனு
ADDED : ஜூலை 06, 2024 05:34 AM
சங்கராபுரம்: பாவளம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பாவளம் கிராம மக்கள் உதயசூரியன் எம்.எல்.ஏ.,விடம் அளித்த மனு:
சங்கராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பூட்டை ஊராட்சியை சேர்ந்தது பாவளம் கிராமம். இப்பகுதிக்கு எந்த ஒரு அடிப்படை வசதி தேவை என்றாலும் 3 கி.மீ., தொலைவில் உள்ள பூட்டை கிராமத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, பொது மக்கள் நலன் கருதி பூட்டை ஊராட்சியைச் சேர்ந்த பாவளம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏ., நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.