/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பாவளம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க முதல்வருக்கு மனு
/
பாவளம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க முதல்வருக்கு மனு
பாவளம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க முதல்வருக்கு மனு
பாவளம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க முதல்வருக்கு மனு
ADDED : மார் 08, 2025 02:08 AM
சங்கராபுரம்: பாவளம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க தமிழக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம், பூட்டை ஊராட்சியில், துணை கிராமமாக பாவளம் உள்ளது.
இந்த கிராமம், பூட்டை யில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ளது. அந்த கிராம மக்கள் அடிப்படை தேவைகளுக்கு, பூட்டை ஊராட்சியையே சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால், பாவளத்தை, தனி ஊராட்சியாக அறிவிக்க கடந்த பல மாதங்களாக மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக, கிராம மக்கள் தமிழக முதல்வர், உள்ளாட்சித்துறை அமைச்சர், கலெக்டர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பி உள்ளனர். இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.