/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பேரூராட்சியில் இணைக்க எதிர்ப்பு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
/
பேரூராட்சியில் இணைக்க எதிர்ப்பு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
பேரூராட்சியில் இணைக்க எதிர்ப்பு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
பேரூராட்சியில் இணைக்க எதிர்ப்பு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
ADDED : ஆக 21, 2024 07:17 AM

கள்ளக்குறிச்சி : சித்தப்பட்டினம், சு.கள்ளிப்பாடி ஊராட்சிகளை, பேரூராட்சியில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
இது தொடர்பாக 2 ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் தனித் தனியாக கலெக்டரிடம் அளித்த மனு:
ரிஷிவந்தியம் ஒன்றியம் சித்தப்பட்டினம், சு.கள்ளிப்பாடி ஊராட்சிகளை மணலுார்பேட்டை பேரூராட்சியுடன் இணைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.
கிராமத்தில் பெரும்பாலான மக்கள் கூலி வேலை மற்றும் கரும்பு தொழிலாளர், விவசாய கூலி, கட்டு மானம், பெயிண்டர், எலக்ட்ரிஷியன் வேலை செய்து வருகின்றனர். ஏழ்மை நிலையில் பல குடும்பங்கள் உள்ளது.
எங்களது ஊராட்சிகளை மணலுார்பேட்டை பேரூராட்சியுடன் இணைத்தால், கிராம ஊராட்சியில் கிடைக்ககூடிய எந்த சலுகையும் கிடைக்காது.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் வறுமையில் உள்ள பொதுமக்களுக்கு பெரும் பயனுள்ளதாக உள்ளது. இந்த நிலையில் பேரூராட்சியில் இணைத்தால் பயன்பெற முடியாத நிலை ஏற்படும்.
மேலும், குடிநீர் மற்றும் சொத்துவரி போன்றவை அதிகரிக்க கூடும். கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எனவே, சித்தப்பட்டினம், சு.கள்ளிப்பாடி ஊராட்சிகளை மணலுார்பேட்டை பேரூராட்சியுடன் இணைப்பதை கைவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

