/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோமுகி அணை ஓடை ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு
/
கோமுகி அணை ஓடை ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு
கோமுகி அணை ஓடை ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு
கோமுகி அணை ஓடை ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு
ADDED : ஆக 21, 2024 06:39 AM
கள்ளக்குறிச்சி : கோமுகி அணையின் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் கச்சிராயபாளையம், காமராஜர் பகுதி மக்கள் மனு அளித்தனர்.
மனு விபரம்:
கச்சிராயபாளையம் கோமுகி அணை வாய்க்கால் ஓடை துவங்கும் இடத்திலிருந்து சோதனைச்சாவடி, மந்தைவெளி, வடக்கனந்தல் வழியாக குடியிருப்பு பகுதி உட்பட பல்வேறு இடங்களில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான தண்ணீர் செல்லும் வாய்க்கால் ஓடையை ஆக்கிரமிப்பு செய்து பலர் அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வாய்க்காலுக்கு இடையே குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதாக தெரிகிறது. எனவே, கோமுகி அணை வாய்க்கால் துவங்கும் இடத்தில் இருந்து கச்சிராயபாளையம், வெங்கட்டாம்பேட்டை ஆகிய பகுதிகள் வழியாக நீர் பாசனம் சென்றடையும் இடம் வரை பாரபட்சம் இன்றி ஓடை ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அம்மனுவில் உள்ளது.