/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விளையாட்டு மைதானம் கலெக்டர் ஆய்வு
/
விளையாட்டு மைதானம் கலெக்டர் ஆய்வு
ADDED : மார் 05, 2025 11:22 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விளையாட்டு மைதானத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவியர் மற்றும் இளைஞர்கள், விளையாட்டு பயிற்சி பெற மைதானம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து நீச்சல் குளம், உடற்பயிற்சிக்கூடம், 400 மீட்டர் ஓடுதளம், கால்பந்து, கையுந்து பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, பேட்மின்டன் உள்ளிட்டவைகளுக்கான, விளையாட்டு அரங்கத்துடன் மைதானம் அமைக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்காக வீரசோழபுரம் பகுதியில், கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு வரும் இடத்தின் அருகில், 12 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, ஒருங்கிணைந்த மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த இடத்தை கலெக்டர் பிரசாந்த் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.