ADDED : மார் 04, 2025 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மண்டல சத்யசாயி சேவா சமிதிகளை சேர்ந்த 50 சேவாதள தொண்டர்கள் இணைந்து, நீலமங்கலம் கோதண்டராமர் மற்றும் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி மேற்கொண்டனர்.
சத்யசாயி சேவா சமிதி மாவட்டத் தலைவர் சரவணன் வழிகாட்டுதலுடன் மாவட்ட பொறுப்பாளர் கள் ஸ்ரீதரன், சேரன், சாய்கிருஷ்ணா, செல்வி, கண்ணம்மா மற்றும் கன்வீனர்கள் கணேசன், பூராமூர்த்தி, வைரமூர்த்தி, ஜெயராமு ஆகியோர் கொண்ட குழுவினர் கோவில் வளாகத்தில் துாய்மை பணிகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு வேலி அமைத்தனர்.