/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுமியை கர்ப்பமாக்கிய கொத்தனார் மீது 'போக்சோ'
/
சிறுமியை கர்ப்பமாக்கிய கொத்தனார் மீது 'போக்சோ'
ADDED : ஜூலை 13, 2024 04:42 PM
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே சிறுமியை திருமணம் கர்ப்பமாக்கிய கொத்தனார் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த அயன்வேலுாரைச் சேர்ந்தவர் கணேசன் மகன் ரவி, 23; கொத்தனார். இவரும், சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியும், காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார்.
இதையடுத்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் ரவி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.